Top News

இலங்கையருக்கு சிங்கப்பூரில் பொது மனப்பான்மை விருது



பிரதான வீதியில் பயணித்த வாகனங்கள் மீது வாளால் தாக்குதல் நடத்தியது மட்டுமன்றி, நபரொருவரையும் தாக்க முயற்சித்த சம்பவம் சிங்கபூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதுதொடர்பிலான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

இந்நிலையில், அந்த நபரை இலங்கையரான அமில சிந்தனா (வயது 35) என்பவரே மடக்கிப்பிடித்துள்ளார். விநியோக சேவை நிறுவனமொன்றை வைத்திருக்கும் அமிலவுக்கு சிங்கபூரிலுள்ள அங் மோ கியோ பொலிஸ் பிரிவினால் பொது மனப்பான்மை விருது வழங்கப்பட உள்ளது.

ஆயுதம் ஏந்திய ஒருவரால் மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதலை தடுத்து, பொதுமக்களுக்கு அதிக தீங்கு விளைவிக்காமல் தடுத்து நிறுத்தியதற்காக, அவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.

சிங்கபூரிலுள்ள புவாங்காக் கிரசன்ட்டில் போக்குவரத்துச் சந்தியில் அமில காத்திருந்தார். அப்போது, சாமுராய் ரக வாளை ஏந்திவந்தவர்கள், வீதியில் பயணித்த வாகனங்களில் மீது தாக்குதல் நடத்தினார். சுமார் 5 வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அறியமுகின்றது.

இதனை, தன்னுடைய கையடக்க தொலைபேசியின் ஊடாக அமில, பதிவு செய்துகொண்டிருந்தார். அப்​போது அமிலவின் அருகில் வாளுடன் வந்தவர், மூன்று முறை சரமாரியாக வெட்டினார். இதனால், அமிலவின் இடது தோள்பட்டை, கழுத்து மற்றுமு் இடது கையில் மூன்று காயங்கள் ஏற்பட்டுள்ளன.

வாள் ஈடுபட்ட 37 வயதானவர், விழுந்துவிட்டார். அதன்பின்னர், அவருடைய இரண்டு கால்களையும் அமில பிடித்துக்கொண்டார். பின்னர், அவ்விடத்துக்கு ஓடோடி​வந்த இன்னும் சிலர், தாக்குதல்தாரியிடமிருந்த வாளை பிடுங்கி வீசிவிட்டு, இறுக்கிப் பிடித்துக்கொண்டனர். அங்கு விரைந்த பொலிஸார் தாக்குதல்தாரியை அழைத்துச் சென்றுவிட்டனர்.

தாக்குதல்தாரி, இனந்தெரியாத மாத்திரைகளை உட்கொண்டிருந்தமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. பொதுமக்களுடன் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் பின்னரே, வீதியின் குறுக்காக வந்து இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post