Top News

திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் !





வெளிநாட்டு விவாகரத்து பதிவு செய்தல், திருமண முடிவுறுத்தல் அல்லது சட்ட ரீதியான பிரிதலை ஏற்றுக்கொள்ளல் தொடர்பாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


அதற்கமைய சட்ட வரைஞரால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதுடன், திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தில் திருமணத்தைப் பதிவு செய்வதற்காக பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள் உள்வாங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்தோடு வெளிநாட்டு விவாகரத்து பதிவு செய்தல், திருமண முடிவுறுத்தல் அல்லது சட்ட ரீதியான பிரிதலுக்கான ஏற்பாடுகள் குறித்த கட்டளைச் சட்டத்தில் உள்வாங்கப்படாமையால், திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.


அதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Post a Comment

Previous Post Next Post