Top News

புத்தாண்டு முடிவதற்குள் தட்டுப்பாடு தீர்க்கப்படும்




இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு நிறைவடைவதற்குள் தீர்க்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே மீண்டும் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

தட்டுப்பாடு முடிவுக்கு வந்தவுடன், அரசாங்கம் மீண்டும் மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய ஆரம்பிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், நாட்டிலுள்ள எரிபொருள் வளம் குறித்த மேலதிக ஆய்வுகள் இடம்பெற்றுவருவதாகவும் ஒரு வருடத்துக்குள் நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த வாரத்தில் மேலும் இரண்டு டீசல் தொகுதிகள் நாட்டுக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிசக்தி அமைச்சர் உறுதியளித்த போதிலும், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கான நீண்ட வரிசையில் தொடர்ந்தும் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post