Top News

பால்மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு?




இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோகிராமின் விலையை 300 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 120 ரூபாவினாலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஒரு டொன் பால்மாவின் விலை 5,500 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த பின்புலத்தில், பால்மாவின் விலையை அதிகரிப்பதை தவிர்த்து வேறு மாற்றுவழி இல்லையென அவர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பில் நிதி அமைச்சு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. (R)

Post a Comment

Previous Post Next Post