ஊடக மாநாடு நடத்தி இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியின் தலைவரும் பொதுபலசேனாவின் தலைவருமான ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை, ஜூன் (28) விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே நேற்று உத்தரவிட்டார்.
ஞானசார தேரர் நேற்று (14) நீதிமன்றில் ஆஜராகியிருந்த நிலையில் விசாரணைக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டது.
அவருக்கு எதிரான வழக்கு குற்றவியல் சட்டத்தின் 291 (பி) பிரிவிற்கு உட்பட்டது எனவும், நீதவான் நீதிமன்றத்தின் மூலம் இதற்கு தீர்வு காண முடியும் எனவும் ஞானசார தேரரின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்படி, சட்டமா அதிபருடன் கலந்துரையாடி வழக்கை குறுகிய காலத்தில் முடித்து வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலித்து வருவதால் வழக்கை ஒத்திவைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
Post a Comment