மாட்டு வண்டியில் சென்று அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிரதேசசபை உறுப்பினர்கள்

ADMIN
0

தவசீலன்

நாட்டில் அதிகரித்துள்ள விலைவாசி, பொருட்கள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று மாட்டு வண்டியில் பிரதேச சபைக்கு சென்றுள்ளனர்.

நாட்டின் இந்த நிலைமைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் எனக் கோரி கவனயீர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மாட்டு வண்டியில் கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளர், உப தவிசாளர் உறுப்பினர்கள் பிரதேசசபையை நோக்கி இன்று நகர்ந்து செல்கின்றனர். (R)




Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top