Top News

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் வழக்கு விசாரணை திகதி அறிவிப்பு!





முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.


2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளுக்கான முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசேன் இலங்கை வந்திருந்த சந்தர்ப்பத்தில், கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலக வளாகத்தினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Previous Post Next Post