Freelancer / 2022 மார்ச் 11 , பி.ப. 05:23 - 0 - 26
FacebookTwitterWhatsApp

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை இன்று கொழும்பு - மருதானைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் ஏற்பாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பான ஆவணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், முஜிபுர் ரகுமான், மனோ கணேசன் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
அத்துடன், அரசியல் செயற்பாட்டாளர் விக்கிரமபாகு கருணாரத்ன உள்ளிட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகளும், பெருமளவிலான பொதுமக்களும் இதன்போது கையெழுத்திட்டனர்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. (K)