ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் இலங்கைக்கு சாதகமாக அமைந்துள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வெதுவெதுப்பான நீருடன் கூடிய எமது கடல் இலங்கைக்கு நல்லதொரு சந்தர்ப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் விரும்புவதாகவும் அவர் கூறுகிறார்.
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனது மூன்று சகோதரர்களும் நாட்டை ஆட்சி செய்யும் விதம் சரியானது எனவும் அதில் தவறில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Post a Comment