இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை 150,000 ரூபாயைத் தாண்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 150,000 ரூபாயாகவும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 139,000 ரூபாயாகவும் காணப்படுகின்றது.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர் தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணியாக உள்ளது.
மேலும், இலங்கை சந்தையில் தங்கத்தின் அளவு வேகமாக குறைந்து வருவதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சிறிது குறைவு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1980.21 அமெரிக்க டொலராக பதிவாகி இருந்தது. எனினும் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1974.71 டொலராக உள்ளது.
Post a Comment