Top News

முதல் இலங்கையர் என வரலாற்றில் இடம்பிடித்தார் இரா.சாணக்கியன்!



சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பேச்சாளராக பங்கேற்ற முதல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பெற்றுள்ளார்

இந்தோனோஷியாவின் பாலியில் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் 144ஆவது அமர்வு இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில் குறித்த அமர்வில் காலநிலை மாற்றம் தொடர்பில் இன்று(வியாழக்கிழமை) மாநாடு ஒன்று நடைபெற்றிருந்தது.

சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் 178 நாடுகள் உறுப்பு நாடுகள் உள்ள நிலையில், பிரித்தானியா, ஒஸ்ரியா, இந்தோனேசியா மற்றும் இலங்கையினை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் பேச்சாளர்களாக கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கையில் சுற்றுசூழலினை அரசாங்கமே அழிக்கின்றது.

அப்படியான நேரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கிளஸ்கோ மாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள் இலங்கையில் 100 சதவீதம் நடைமுறையில் இல்லை. அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதனை சர்வதேச நாடுகள் கண்காணிக்க வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post