வார இறுதி தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, நாளைய தினம் P,Q,R,S,T,U,V,W பிரிவுகளுக்கு 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 3 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
A,B,C பிரிவுகளுக்கு காலை 8.30 முதல் 4.30 வரை 04 மணி நேரமும், மாலை 4.30 முதல் இரவு 10.30 வரை 3 மணி நேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் , A,B,C பிரிவுகளுக்கு மார்ச் 06 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment