அமைச்சுப் பதவிகளில் இருந்து தூக்கியெறியப்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரின் கட்சிகள் உட்பட பங்காளிக் கட்சிகளின் கூட்டமைப்பு கொழும்பில் பொதுக்கூட்டமொன்றை நடாத்தத் திட்டமிட்டு வருவதாக அறிவிக்கப்படுகிறத.
மஹிந்த ராஜபக்ச 2015 ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றதன் பின்னர் “மஹிந்த சூறாவளி” என்ற பெயரில் நுகேகொடையில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தை போல் அதே இடத்தில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களது பங்களிப்புடன் சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இதுகுறித்து ஆராயப்பட்டதாக தெரியவருகிறது இந்தப் பொதுக்கூட்டத்தை இந்த மாத இறுதிக்குள் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பங்காளி கட்சிகள் ஒன்று கூடி நாடு முழுவதும் மாவட்ட மட்டத்தில் பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
Post a Comment