மூன்று பிள்ளைகளின் தாயை காணவில்லை
March 13, 2022
0
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொலிவேரியன் கிராமத்தில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தாயான அப்துல் கபூர் பர்ஸானா (வயது - 34) எனும் பெண்ணை, 2022.01.29ஆம் திகதி முதல் காணவில்லை.
காணாமல் போன அன்று அரிசி வாங்கி வருவதற்கென கடைக்குச் சென்ற அப்பெண், அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற பஸ்ஸில் ஏறிச் சென்றதாக அவரை இறுதியாகக் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இரண்டு மாதங்களை அண்மித்தும் இன்னமும் அவர் வீடு திரும்பவில்லை என இவரது தந்தை அப்துல் கபூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இப்பெண் தொடர்பாக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கணவனை சிறிது நாள்களாக பிரிந்து வாழும் மனநோயாளியான இந்தத் தாயின் பிரிவினால் மூன்று மாத சிசு சிறிய பிள்ளைகள் செய்வதறியாது திணறி வருகின்றனர். தாய்ப்பால் கூட இல்லாமல் தாயினுடைய தாயின் பராமரிப்பில் உள்ள சிசு அழுதவண்ணம் உள்ளதால், இந்த இளம் தாய் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் அல்லது இவரை பார்த்தாலோ அல்லது இவரைப் பற்றி தகவல் அறிந்தாலோ அண்மையில் உள்ள பொலிஸ் நிலையம் ஊடாக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்துக்கு அறியத்தருமாறு, அப்பெண்ணின் தந்தை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார்.
Share to other apps