நாட்டில் தற்போது அரசாங்கம் என்ற ஒன்று கிடையாது.
ராஜபக்ச குடும்பம் மாத்திரம் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது
இவர்களால் ஏப்ரல் அல்லது மே மாதம் வரை மாத்திரமே பயணிக்க முடியும்.
அதன் பின்னர் ராஜபக்ச அரசாங்கம் செயற்பாட்டு ரீதியில் கவிழ்வது நிச்சயம் என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆளுந்தரப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் பலர் சுயாதீனமாக செயற்படுகின்ற நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்தால் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்க நேரிடும்.
தொடர்ந்தும் தனியொருவருக்கு அதிகாரங்களை வழங்க மக்கள் தயாராக இல்லை எனவும் ஆறு மாதங்களுக்குள் ஆட்சி கவிழும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment