Top News

இடைநிறுத்தப்பட்டது புகையிரத கட்டண அதிகரிப்பு



(எம்.மனோசித்ரா)


புகையிரத திணைக்களத்தினால் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட கட்டண திருத்தம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.


புதிய கட்டண திருத்தம் தொடர்பில் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம, தற்போதுள்ள புகையிரத கட்டணங்களில் எவ்வித அதிகரிப்பும் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


தூரப்பிரதேசங்களுக்கான புகையிரத கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் நேற்றுமுன்தினம் அறிவித்திருந்தது.


எனினும் இது போக்குவரத்து அமைச்சிற்கு அறிவிக்காமல் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் எனத் தெரிவித்து வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பிலேயே அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post