பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் அரசின் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக 174 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில் இம்ரான்கான் பதவியிழந்து ஆட்சி கவிழ்க்கப்
பட்டது.
342 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரனை வெற்றிபெற 172 வாக்குகள் தேவையென்ற நிலையில் பிரேரனைக்கு ஆதரவாக 174 வாக்குகள் அளிக்கப்பட்டன.
தற்போதைய நிலையில் இம்ரான்கான் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளதால் புதிய ஆட்சியில் ஷெஹ்பாஸ் ஷெரீப் பிரதமராக தேர்வாக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தல் 2023 அக்ரோபரில் தான் நடைபெறும் என்பதால் அதுவரை புதிய பிரதமர் தலைமையில் அரசு தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லா பிரேரனை ஒன்றினூடாக ஆட்சியை இழந்த முதல் பிரதமர் இம்ரான்கான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment