Top News

சிறப்புப் படையணி புகுந்ததால் பரபரப்பு


அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

கொழும்பிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடந்து முன்னெடுக்கப்படுகின்றன. கொழும்பில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்குள் சிறப்புப் படையணியின் மூன்று மோட்டார் சைக்கிள்கள் புகுந்துவிட்டன. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

“எங்களை சுடுவதற்காக வந்தீர்கள்” என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர். எனினும், கடமையிலிருந்த பொலிஸார், அந்த மோட்டார் சைக்கிள்களை திருப்பியனுப்பினர். ஆர்ப்பாட்டக்கார்களும் ஹூ சத்தமெழுப்பினர்.

இந்த அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது? போராட்டக்காரர்களை சுட்டு வீழ்த்த முயற்சிக்கிறார்களா? என சமூக வலைத்தளங்களில் கேள்வி கேட்டுள்ளனர்.

பாராளுமன்றத்துக்கு முன்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்குள், அடையாளம் காணப்படாத மோட்டார் சைக்கிள்கள் மூன்று புகுந்துவிட்டன என, பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post