புலத்கோபிடிய, இம்புல்பே, கேகாலை ஆகிய பிரதேசங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததிலேயே மூவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களில் 128 குடும்பங்களைச் சேர்ந்த 471 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 39 வீடுகள் முழுமையாகவும், 82 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
