அரசாங்கத்தை எதிர்க்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சிகள் குழுக்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நேற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குமாரவெல்கம சம்பிக்க ரணவக்க , அனுரபிரியதர்சன யாப்பா எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட பலரை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
அரசாங்கத்தை எதிர்க்கும் கட்சிகள மத்தியில் ; முன்னோக்கி நகர்வது குறித்து மாற்றுக்கருத்துக்கள் உள்ளதால் முன்னுரிமையளி;க்கவேண்டிய விடயங்களை அடையாளம் காண்பதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
எனினும் அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ள கட்சிகள் ஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு விரும்பவில்லை,ஜனாதிபதி பதவி விலகினால் அமைச்சரவை கலைக்கப்பட்டால் அடுத்த தலைவர் யார் என்பது குறி;த்தும் அவர்கள் மத்தியில் கருத்துடன்பாடு இல்லை.
இதன்காரணமாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை அமைப்பது என தீhமானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment