Top News

விசேட அறிவிப்பை வெளியிடவுள்ள பிரதமர்?


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை நேற்றிரவு பிரதமரிடம் ஒப்படைத்திருந்தனர்.

 

இதனையடுத்து, அமைச்சரவை இராஜினாமாக்கள் தொடர்பாக உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு பிரதமரும் இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.


குறித்த சந்திப்பைத் தொடர்ந்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை, இன்று மாலையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாகவும் அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

Previous Post Next Post