ஜனநாயகத்திற்காகவே இளைஞர்கள் வீதியில் இறங்கியுள்ளதாகவும், அவர்களின் போராட்டத்தை சரியாக புரிந்து கொள்ள முன்வர வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இராணுவ வீரர்களை முன்னிலைப்படுத்தி உயிரைக் காப்பாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போதிலும், யுத்தத்தில் வெற்றி பெற்ற சரத் பொன்சேகா உள்ளிட்ட வீரர்களை பழிவாங்கியது யார் என்பது உலகுக்குத் தெரியும் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இராணுவ வீரர்களின் கௌரவத்தை காட்டிக்கொடுத்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இன்று (12) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
20 ஆவது திருத்தத்தை நீக்கி 19 ஆவது திருத்தத்தை பலப்படுத்தவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கும், ஜனநாயகத்திற்காக நம்பிக்கையில்லா பிரேரணை, குற்றப்பிரேணை போன்றவற்றுக்கு அப்பால் அரசியலமைப்பு ரீதியான எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயங்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இன்று சந்தர்ப்பவாதத்தின் படி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சு பதவிகளுக்காக இடமாற்றங்கள் (தலைமாற்றல்) இடம்பெறுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நாட்டு மக்கள் அதனை கோரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று சீர்குலைந்த பொருளாதாரக் கொள்கை காணப்படுவதாகவும் சர்வதேச உறவுகளும் இழக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் மாற்று விகிதங்களை பலப்படுத்துவதற்கான வழிமுறைகளை தெளிவுப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர், புதிய தொலைநோக்குப் பார்வையுடன் சர்வதேசத்தை வெற்றிகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தற்போதைய நெருக்கடிக்கு திடமான மற்றும் விஞ்ஞானபூர்வமான தீர்வே தேவை எனவும், பொருளாதார யுத்தத்தை ஆயுதங்களால் வெற்றிக்கொள்ள முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டில் ஜனநாயகம், பொருளாதாரம் மற்றும் அரசியலுக்கு புதிய வேலைத்திட்டம் தேவை எனவும், நாட்டை கட்டியெழுப்புவதற்காக நாம் அனைவரும் ஒன்றாக எழ வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
Post a Comment