ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் அதிகாரத்தை அடைவதற்கான பிரத்தியேக கொள்கைகள் இருந்தாலும் இளைஞர்களின் பரிந்துரைகளுக்கும் செவிசாய்க்க வேண்டும் என முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய கேட்டுக்கொண்டுள்ளார்.
அதற்கைமய, நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் இந்த மாபெரும் சமூகப் புரட்சியை குறைத்து மதிப்பிட கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த போராட்டங்களின் போது அவர்கள் கடைப்பிடிக்கும் உறுதிப்பாட்டையும் ஒழுக்கத்தையும் பாராட்டுவதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, இளம் சமுதாயத்தினரின் குரலுக்கு செவிசாய்த்து அவர்கள் எதிர்பார்க்கும் அரசியல் திருத்தங்கள் குறித்து பேசி நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் இவ்விடயம் குறித்து தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
எந்தக் காரணத்திற்காகவும் நாட்டின் அமைதிக்கு பாதகம் ஏற்பட இடமளிக்காமல் பாத்துக்கொள்ளும் கடமை ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் உண்டு என்றும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
Post a Comment