அலி சப்ரியின் இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதுவரையில் ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நான்கு பேர் கொண்ட புதிய அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.
இதன்போது அலி சப்ரி நிதியமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.
எனினும் பதவியேற்று 24 மணித்தியாலங்களுக்குள்ளேயே தனது பதவியினை இராஜினாமா செய்வதாக அலி சப்ரி அறிவித்திருந்தார்.
அத்துடன், தேவை ஏற்படின் தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இராஜினாமா செய்ய தயாராகவுள்ளதாகவும் அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எதுஎப்படி இருந்தாலும் அலி சப்ரியின் இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதுவரையில் ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்காரணமாக அவரே இன்றோ அல்லது எதிர்வரும் சில தினங்களிலோ பொறுப்பேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் அமைச்சரவையிலும் நிதியமைச்சராக செயற்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையிலும் அவரே பங்கேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.
Post a Comment