புனித ரமழான் மாதத்திற்கான தலைப்
பிறை இலங்கையில் இன்று மாலை தென்பட்டுள்ளதாகவும் இதற்கமைய நாளை(3) நோன்பு பிடிக்குமாறும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக்குழு இன்று மாலை கூடியது.
இதன்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலை பிறை தென்பட்டமைக்கான தகவல்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்து நோன்பு நாளை முதல் ஆரம்பமாகும் என பிறைக்குழு தீர்மானித்தது.
Post a Comment