மின்வெட்டு காரணமாக மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையின் செயற்பாடுகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
வைத்தியசாலையில் இரண்டு ஜெனரேட்டர்கள் இருந்த போதிலும் அதில் ஒன்று பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
எனினும், டீசல் இல்லாததால் மற்ற ஜெனரேட்டரையும் இயக்க முடியாத நிலை காணப்படுகிறது.
மெழுகுவர்த்தி ஏற்றி நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலை பொலன்னறுவை மாவட்டத்தின் இரண்டாவது முக்கியமான வைத்தியசாலையாகும்.
Post a Comment