மத்திய வங்கி சுயாதீனமாக செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து இதனூடாக தீர்வு காண முடியும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை திட்டவட்டமான திசையில் வழிநடத்தும் ஆற்றலும் பலமும் இலங்கை மத்திய வங்கிக்கு இருப்பதாக தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த சில மாதங்களில் திருப்புமுனையை எட்ட முடியும். அதற்கு அரசியல் ஸ்திரத்தன்மையும் சமூக ஸ்திரத்தன்மையும் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தான் நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காகவே வருகை தந்துள்ளதாகவும் அரசியல்வாதிகளுக்கு சேவை செய்ய தான் வருகை தரவில்லை எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment