Top News

ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை – நாமல் ராஜபக்ஷ



ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிறுவ வேண்டிய அவசியம் இருப்பதால், அது நிறைவேறினால், ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.


நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெறும் கட்சிக்கு அரசாங்கம் வழங்கப்படும் என ஜனாதிபதி தெளிவாக கூறியுள்ளதால், மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


நாடாளுமன்றத்திற்குள் 113 ஆசனங்களைப் பெறுவதன் மூலம் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெற முடியும் என்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் தெளிவாகக் கூறியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.


இந்த நேரத்தில் கட்சிகள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி மக்களை அமைதிப்படுத்த ஒன்றிணைய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


1988/1989ஆம் ஆண்டுகளில் அரசியல்வாதிகள் அவசர முடிவுகளை எடுத்த வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது என்றும் எனவே தொலைநோக்கு பார்வையுடன் ஒன்றிணைந்து கூட்டு முடிவுகளை எடுப்பதே சிறந்தது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்

Post a Comment

Previous Post Next Post