ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கைகலப்பு.

ADMIN
0


நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தின்போது ஆளும் கட்சி மட்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருவருக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்த விஜேசிறி மற்றும் பொதுஜன பெரமுனவின் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகியோரை அவையில் இருந்து வெளியேற்றுவதற்கு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி ,நாடாளுமன்ற நிலையியற் கட்டளை எண் 79ன் கீழ் அவர்களை வெளியேற்றுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

குறித்த இரண்டு உறுப்பினர்களையும் அவையில் இருந்து வெளியேற்றுவதற்கு வசதியாக நாடாளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் இடைநிறுத்தப்பட்டன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top