பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் சற்று முன்னர் கூடியது.
(UPDATE 10.01 am) - பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
*(UPDATE 10.16 am)*- பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சபைத் தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ ஆளும் தரப்பு பிரதம கொறடாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
*(UPDATE 10.20 am)* - சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் அலி சப்ரியினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
*(UPDATE 10.31 am*) - சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சில உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்பட தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்ப தெரிவித்துள்ளார்.
*(UPDATE 10.40 am)* - தானும் 10 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
*(UPDATE 10.50 am)* - ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்களும் சுயேற்சையாக செயற்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
*(UPDATE 12.12 pm)* - கட்சி தலைவர்களுக்காக விஷேட கூட்டத்திற்கு சபாநாயகர் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற அமர்வுகள் நாளை (06) காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
/chat.whatsapp.com/Fq4TfCPtVKE5nGJCKsOvF8
Post a Comment