![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMZdOSaKu03vxSTUhf2ZEgnTQu6R7-GJz_Gm5o4eHhW7Impfg7ViCAXDH0goXqbo7hW2ZcEDT-wiRPe8skRTo8azoFeqCSzZs2cF-u6yO8A2CBfFjc1wn081Y8F8RUAhA3fa0J5aqfFILACO2qM7q9aDAO-Yeu92m5WeQg4jhb0_5DTcO3sRkwSQ/w640-h640/2-Recovered%20copy.jpg)
முன்னாள் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவின் கண்டியிலுள்ள வீட்டிற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவின் பொலன்னறுவை வீட்டுக்கு அருகிலும் போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பிலியந்தலையில் உள்ள முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.