மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களுக்கு தமது முழு ஆதரவை வழங்கியுள்ளார்.
நிதி முறைகேடுகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அனைத்து அரசியல்வாதிகளும் இந்த நிலைமையில் இருந்து தப்புவதற்கு இடமளிக்கக் கூடாது என ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
நிதி முறைகேடுகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் வேட்புமனுக்களை நாட்டில் எதிர்வரும் தேர்தலில் ஏற்றுக்கொள்ள அனுமதிக்கக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (R)
Post a Comment