Top News

சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் திருமணம் செய்த தம்பதியின் முன்மாதிரி!


சகோதரர் Fazlan A Cader மற்றும் சகோதரி Afra Akram ஆகியோரின் திருமண நிகழ்வு ஹெம்மாதகமயில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் நேற்று (2024/05/09) நடைபெற்றுள்ளது.

அவர்களின் திருமண நிகழ்வு குறித்து சகோதரர் Fazlan A Cader தனது முகநூல் பக்கத்தில் இட்டிருந்த பதிவையும் புகைப்படங்களையும் பார்த்த போது மனம் நெகிழ்ந்து போனேன்.

வீண் ஆடம்பரங்களுடனும் தகுதிக்கு மீறிய செலவுகளுடனும் இடம்பெறும் எமது சமூகத்தின் அநேகமான திருமணங்களுக்கு மத்தியில், இவர்களின் திருமணம் என்னைப் பொறுத்தவரை உண்மையில் ஒரு முன்மாதிரியான நிகழ்வாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மணமக்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் வழங்கி அவர்களின் இல்லற வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாக!


சகோதரர் பஸ்லான் அவர்களின் பதிவு

May 9th, 2024, we celebrated our nikah at Dharul Hasanath Children's Home. Choosing this venue underlines our belief in providing emotional support to children in need. May Allah bless me, my wife, and our family abundantly.

அன்பின் உறவுகளே!

எம் நிகாஹ் வைபவம் 09.05.2024 அன்று ஹெம்மாதகமை தாருல் ஹஸனாத் சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் மன மகிழ்வுடன் நடைபெற்றது.

"நம் சமூகம் பசியில்லாத இடத்திலே அதிகம் விருந்து வழங்குகிறது."

"இதுவரை ஓர் திருமண வைபவம் எப்படி நடக்கும் என்பதை வாழ்விலே பார்த்தே இல்லாத இந்த சிறுவர்களிடத்தில் இது ஓர் முதல் வைபவம்"
-சிறுவர் பாராமரிப்பு இல்லத்தின் தலைவர் ஸாலிம் ஹஸ்ரத்- இது போன்ற புனித இடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கிடைத்த மிகப்பெரும் பாக்கியம் என்ற உணர்வை ஏற்படுத்தியது. அல்ஹம்துலில்லாஹ்!

நம் வீடுகளில் கோலாகலமாக நடைபெறும் வைபவங்களில், உறவுகளுக்காவும், அன்புக்காகவும் ஏங்கும் அனாதைகள்; ஆதரவற்ற முதியோர்களையும் இணைப்பது பெரும் தர்மமாக அமையும்.

இறைவன் எமது எண்ணங்களையும், செயல்களையும், உறவுகளையும் ஏற்றுக்கொள்வானாக.

எமது நண்பர், அயலவர், உறவினர்களுக்கான வலீமா வைபவம் டிசம்பர் மாதம் வைப்பதற்கு தீர்மானித்து இருக்கின்றோம், இன்ஷா அல்லாஹ்!

Fazlan A Cader With Afra Akram













Post a Comment

Previous Post Next Post