தேர்தலை நடத்த பணம் இல்லை எனக் கூறிக கொண்டு, தனது சொந்த வாக்குகளை பெருக்கிக் கொள்ள, 24 வருடங்களுக்கு முன்னர் மரனித்த ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகத்தை துரிதமாக நிர்மானிக்க வாக்குகளை பெறுவதற்கு வரிப்பணத்தை ஒதுக்கியுள்ளார். இது எதனை உணர்த்துகிறது. என நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (19) கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்;
அவருடைய குடும்பம் இதை கோரவில்லை. அவருடைய குடும்பத்தினருக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.
நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத போக்கையே ஜனாதிபதி காட்டி வருகிறார். நாட்டை வங்குரோத்தாக்கியவர்கள் தொடர்பான தீர்ப்பு, பிரஜா உரிமை தொடர்பான டயனாவின் தீர்ப்புகளை அரசாங்கமும் ஜனாதிபதியும் கவனத்தில் கொள்ளாது கிடப்பில் போட்டுள்ளனர்.
சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சி கண்டுள்ளதாக சர்வதேச நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அரசாங்கம் இதை தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறது.
மருதானை பிரதேசத்தில், வறிய மக்களின் தேவைக்காக நிர்மானிக்கப்பட்ட 20 கோடி பொறுமதியான சனசமூக நிலையத்தை அரசாங்க தரப்புக்குச் சொந்தமானவர்கள் கையகப்படுத்தி வருகின்றனர். இது அநீதி. கொழும்பில் வெள்ளம், மினசார இணைப்புகளில் மரம் சரிந்து விழுவதால் ஏற்படும் உடனடி பாதிப்புகளுக்கு மாநாகர ஆணையாளர் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காது அசமந்தமாக செயற்பட்டு வருகிறார். உள்ளூராட்சி மன்றங்கள் இயங்காததால் பௌதீக கட்டுமானங்கள், பராமரிப்புகள் சரியாக மேற்கொள்ளப்படாமை குறித்து அரசாங்கத்திற்கு எந்த பொறுப்பும் இல்லாது போல் செயற்பட்டு வருகின்றன. மக்கள் குறித்த எந்த சிந்தனையும் இந்த அரசாங்கத்திற்கு இல்லை.
Post a Comment