Top News

"அனைவராலும் நேசிக்கப்பட்டவர் சபாநாயகர் பாக்கீர் மாக்கார்" Speaker Muhammad Abdul Bakeer Markar

  • 107 ஆவது சிரார்த்த தினத்தையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது

சமூ­கத்தில் எண்­ணற்ற மக்கள் தோன்றி, வாழ்ந்து மறை­கின்­றார்கள். அவர்­களுள் பெரும்­பா­லானோர் தங்­க­ளுக்­காக வாழ்ந்­த­வர்கள். அவர்­க­ளது மறை­வோடு அவர்­க­ளது நினைவும் மறக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் ஒவ்­வொரு சமூ­கத்­திலும் காலத்­துக்கு காலம் சிலர் தோன்­று­கின்­றார்கள் அவர்கள் தனக்­காக மட்டும் வாழாது, சமூ­கத்தின் நன்­மைக்­காக அர்ப்­ப­ண­மா­ன­வர்கள். தங்­க­ளது தனிப்­பட்ட வாழ்வு என்ற நதியை சமூகம் என்ற சமுத்­தி­ரத்தில் சங்­க­மிக்கச் செய்­த­வர்கள். சமூக மேம்­பாட்­டையும், நல்­வாழ்­வையும் தங்­க­ளது இலட்­சி­ய­மாக வரித்துக் கொண்­ட­வர்கள். இத்­த­கை­ய­வர்­களின் வாழ்வும் அதன் நிகழ்­வு­களும் சமூக வர­லாற்­றோடு இரண்­டறக் கலந்து அதன் பிரிக்க முடி­யாத ஒரு அங்­க­மாக மாறி­வி­டு­கின்­றன. அத்­த­கை­ய­வர்­களின் வாழ்க்­கை­யி­னூடே நாம் அவர்­க­ளது கால சமூ­கத்தை தரி­சிக்­கின்றோம். அதன் வளைவு நெளி­வு­களை இனங்­கண்டு கொள்­கிறோம். அவ்­வாறு இனங்­கண்ட இலங்கை தாய் நாடு ஈன்­றெ­டுத்த மிக முக்­கி­ய­மா­ன­தொரு பன்­முக ஆளுமை கொண்ட தலை­வ­ராக போற்­றப்­ப­டு­ப­வ­ராக மர்ஹூம். எம்.ஏ.பாக்கீர் மாக்கார் திகழ்­கின்றார்.

தேசிய ஒரு­மைப்­பாடு, தேசிய ஐக்­கியம் மற்றும் தேச நல­னுக்­கா­கவும் தன்னை அர்ப்­ப­ணித்த இவர் பிர­பல வர்த்­த­கரும் ஆயுர்­வேத வைத்­தி­ய­ரு­மான மர்ஹூம் ஹக்கீம் அலியா மரைக்கார், ராஹிலா தம்­ப­தி­யி­னரின் புதல்­வ­னாக 1917 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி பேரு­வளை மரு­தானை ஊரில் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்­வியை பேரு­வளை மரு­தானை அல் பாஸிய்­யத்துல் நஸ்­ரியா வித்­தி­யா­ல­யத்தில் கற்று பின்னர் 1924 ஆம் ஆண்டு கொழும்பு 12 இல் அமைந்­துள்ள சென். செபஸ்­தியன் கல்­லூ­ரி­யிலும், பின்னர் கொழும்பு ஸாஹிரா கல்­லூ­ரி­யிலும் கற்று பின்னர் அதே கல்­லூ­ரியில் ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்­றினார். இவர் ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்றும் போது கல்­லூ­ரியின் அதி­ப­ராக மர்ஹூம் டி.பி ஜாயா அவர்கள் இருந்தார்.

அங்­கி­ருந்து 1939 ஆம் ஆண்டில் சட்டக் கல்­லூ­ரியில் சேர்ந்து, இரண்டாம் உலக மகா யுத்தம் ஆரம்­ப­மா­கவே 1940 ஆம் ஆண்டு, நாட்டை பாது­காக்கும் தேசிய நலனில் தானும் பங்­கா­ளி­யாக மாற வேண்டும் என்ற நன்­நோக்கில் தேசிய விமான பாது­காப்புப் படையில் சேர்ந்தார். அவ­ரது துணி­வையும், தியாக உணர்­வையும் ஆற்­ற­லையும் கண்ட அக்­கால ஆட்­சி­யா­ளர்கள் அவரை பயிற்­சிக்­காக இந்­தி­யா­வுக்கு அனுப்­பினர். இந்­தியா சென்று பயிற்­சியை முடித்­து­விட்டு வந்து கொழும்பு மற்றும் களுத்­துறை பகு­தி­களில் பாது­காப்பு கட­மை­களில் மும்­மு­ர­மாக ஈடு­பட்டார்.

இரண்டாம் உலக மகா­யுத்தம் முடி­வுக்கு வர 1945 இல் மீண்டும் சட்டக் கல்­லூ­ரியில் சட்­டக்­கல்­வியை தொடர்ந்­த­வ­ராக 1947 ஆம் ஆண்டு பேரு­வளை நகர சபைத் தேர்­தலில் மரு­தானை வட்­டா­ரத்தில் போட்­டி­யிட்­டதன் மூலம் தனது அர­சியல் வாழ்வை ஆரம்­பித்தார். 1950 ஆம் ஆண்டு தொடக்கம் பல வரு­டங்­க­ளாக நகர சபையின் தலை­வ­ராக பதவி வகித்தார்.

பல்­லின மக்கள் வாழும் பேரு­வ­ளையின் சமூக அபி­வி­ருத்­திக்­கா­கவும், பௌதீக உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் பல்­வேறு திட்­டங்­க­ளையும், முன்­னெ­டுப்­பு­க­ளையும், சமுதாய மேம்­பாட்டு திட்­டங்­க­ளையும் மேற்­கொண்டு முன்­னேற்­ற­ம­டைந்த பிர­தே­ச­மாக மாற்­றி­ய­மைத்தார். பேரு­வளை பிர­தேச அபி­வி­ருத்­திக்கு முன்­னோ­டி­யாக செயற்­பட்டார். பேரு­வளை பிர­தேச ஆளு­கையை நம்­பத்­த­குந்­த­தான மாற்­றத்­துக்­கான முன்­னெ­டுப்­பு­களை மேற்­கொண்டார். பேரு­வளை நகர சபைக்கு அர்த்­த­முள்ள பங்­க­ளிப்பை நல்­கினார். பேரு­வ­ளைக்­கான அர­சியல் ரீதி­யான சமூ­க­வியல் பார்­வையை விரி­வு­ப­டுத்­தியே தனது பணி­களை முன்­னெ­டுத்தார்.

பின்னர் 1960 மார்ச் பொதுத் தேர்­தலில் அவர் பிர­தேச மட்ட அர­சி­யலில் இருந்து தேசிய அர­சி­ய­லுக்கு நகர்ந்து, ஐக்­கிய தேசிய கட்­சியின் கீழ் பேரு­வளை தொகு­தியில் போட்­டி­யிட்டு 9339 வாக்­குகள் பெற்று பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வா­கினார்.

அதி­லி­ருந்து பல பத­வி­களை வகித்து அவர் 1977 தொடக்கம் 1978 வரை பிரதி சபா­நா­ய­க­ரா­கவும், 1978 முதல் 1983 வரை சபா­நா­ய­க­ரா­கவும் பதவி வகித்தார். இக்­காலப் பகு­தியில் தனது மும்­மொழி கட்­ட­ளை­யுடன் தனது கட­மை­களை மிகச் சிறந்த முறையில் நிறை­வேற்­றிய பாக்கீர் மாக்கார், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும், பாரா­ளு­மன்ற நிர்­வா­கத்­தையும் திருப்­தியடையச் செய்தார்.

1981 ஆம் ஆண்டு இலங்கை ஜன­நா­யக சோச­லிச குடி­ய­ரசின் ஜனா­தி­பதி ஜே.ஆர் ஜய­வர்த்­தன, பிர­தமர் ஆர். பிரே­ம­தாச ஆகியோர் இள­வ­ரசர் சார்ள்ஸ் மற்றும் டயானா தம்­ப­தி­யி­னரின் திரு­மண நிகழ்வில் கலந்து கொள்ள ஐக்­கிய இராச்­சி­யத்­திற்குச் சென்ற போது, இலங்கை நாட்டின் பதில் ஜனா­தி­ப­தி­யாக மர்ஹூம் பாக்கீர் மாக்கார் கட­மை­யாற்­றினார்.

1983 முதல் 1988 வரை அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ரா­கவும், 1988 இல் இருந்து 1993 வரை தென் மாகாண ஆளு­ந­ரா­கவும் பணி­பு­ரிந்தார். மர்ஹூம் பாக்கிர் மாக்கார் அவர்­களின் தெளிந்த பார்­வையும், தூய உள்­ளமும், துணிந்து செய்த பணி­களும் அவரை புனி­த­ராக புடம்­போட்­டது.

இவர் அர­சி­ய­லிலும், அர­சியல் ரீதி­யி­லான சமூக செயற்­பா­டு­க­ளிலும் மாத்­திரம் தன்னை ஈடு­ப­டுத்திக் கொள்­ளாமல், சமூ­கத்தின் ஒட்­டு­மொத்த எழுச்­சிக்கு தன்னை முழு­மை­யாக அர்ப்­ப­ணித்துக் கொண்டு, அக்­கா­லப்­ப­கு­தியில் சமூக ஒழுங்­கு­களில் தன்னால் முடி­யு­மான மாற்­றத்தை ஏற்­ப­டுத்த பல­ரோடு இணைந்தும், பலரை இணைத்துக் கொண்டும் செயற்­பட்டார்.

நாடு முழு­வதும் உள்ள முஸ்லிம் வாலி­பர்­களை ஓர­ணியில் திரட்­டு­வ­தற்­காக தமது காலத்தை செல­விட்டார். கிராமம் கிரா­ம­மாகச் சென்று இளை­ஞர்­களை ஒன்று திரட்டி அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணிகள் சம்­மே­ள­னத்தை உரு­வாக்­கினார். இது பாக்கீர் மாக்கார் அவர்­களின் மிகப்­பெரும் சாத­னை­யாகும். இதன் மூலம் பல அபி­வி­ருத்தி அடை­யாத பின்­தங்­கிய கிரா­மங்கள் எழுச்சி பெற்­ற­தோடு, இன்னும் பல அபி­வி­ருத்தி பணி­க­ளையும் முன்­னெ­டுக்க ஒத்­து­ழைப்­புக்­களை வழங்கி வந்தார். அப்­போது அன்னார் இளை­ஞர்­க­ளுடன் இணைந்து செயல்­படும் போது அவரும் ஒரு இளை­ஞ­ரா­கவே பரி­ண­மித்து அவர்­க­ளுடன் சங்­க­ம­மாகி பல காத்­தி­ர­மான வினைத்­திறன் கூடிய இளை­ஞர்­களை உரு­வாக்­கி­னார். அந்த வரி­சை­யிலே தான் தனது மகன் இம்­தியாஸ் பாக்கீர் மாக்­கா­ரையும் அந்த வழியில் நடக்க அர்ப்­ப­ணித்­தார்.

கிரா­மிய ஆளு­மை­களை தேசிய நீரோட்­டத்தில் பங்­கேற்கச் செய்து, தேசிய ஆளு­மை­க­ளாக தகை­மைப்­ப­டுத்­து­வ­திலும், உரிய இடத்தை அவர்­க­ளுக்கு வழங்­கு­வ­திலும் முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணிகள் சம்­மே­ளனம் அன்று போல் இன்றும் செய­லாற்றி வரு­கி­றது. இவ்­வாறு உரு­வா­கிய தலை­வர்­க­ளாக என்.எம்.அமீன், சட்­டத்­த­ரணி ரஷீத் எம். இம்­தியாஸ், முஹ்சின், என்.எம்.சஹீத், லுக்மான் ஷிஹாப்தீன், பீ.எம். பாரூக், ஷாம் நவாஸ் உட்­பட நூற்­றுக்­க­ணக்­கான துடிப்­பு­மி­குந்த இளைஞர் பரம்­ப­ரை­யொன்­றையே உரு­வாக்­கினார்.

இந்த வகையில் பாக்கீர் மாக்கார் அவர்­களின் நாட­ளா­விய பய­ணங்­களும் அவரால் சமூகம் பெற்ற நற்­ப­யன்­களும் ஏராளம். முன்னாள் தலை­வர்கள் பிராந்­திய விஜ­யங்­களை மேற்­கொள்­வது அது வெறு­மனே விஜ­யங்­க­ளோடு சுருங்­கி­ய­தல்ல. பிர­தேச தேவை­க­ளுக்கு தீர்­வு­களை வழங்கும் பய­ண­மா­கவே அமைந்­தி­ருந்­தது. இன்று அந்­நிலை மாறி­யுள்­ளது.

இவர் எமது தாய்­நாட்டின் தமிழ் சமூ­கத்தால் விரும்­பப்­பட்­டவர். அன்­றைய காலத்தில் யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் சென்ற வேளை, யாழ்ப்­பாண மாந­கர சபையில் பொது­மக்­க­ளினால் பெரும் வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.

அன்­னார் சிறு­பான்மை சமூ­கத்தைச் சேர்ந்­த­வ­ராக இருந்­தாலும், அனைத்து சமூ­கத்தின் நன்­ம­திப்­பையும் மரி­யா­தை­யையும் பெற்றார். அவர் சிங்­கள மக்­களால் எப்­போதும் நேசிக்­கப்­பட்­ட­வ­ரா­கவும் பாராட்­டப்­பட்­ட­வ­ரா­கவும் இருந்­துள்ளார்.

பாக்கீர் மாக்கார் அவர்­களின் மூத்த புதல்­வரும், முன்னாள் வெகு­சன தொடர்­பாடல் அமைச்­ச­ரு­மான இம்­தியாஸ் பாக்கிர் மாக்­கார்அவர்கள், தனது தந்­தையின் தொலை­நோக்கு பார்­வையை இன்­று­வரை முன்­னெ­டுத்துச் செல்­கின்றார்.

1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பத்தாம் திகதி பாக்கீர் மாக்கார் தனது 80 வது வயதில் இறையடி சேர்ந்தார்.

அவரது அனைத்து பணிகளையும் எல்லாம் வல்ல இறைவன் பொருந்­திக் கொள்வானாக!-

உஸாமா நவாஸ் பேருவளை (Vidivelli Paper)

Post a Comment

Previous Post Next Post