ஓட்டமாவடி : துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் மௌலவி ஒருவரும் அவரது சகோதரரும் கைது

Ceylon M
0 minute read
0


 ஓட்டமாவடி பகுதியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் மௌலவி ஒருவரும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றிரவு (30) அரலகங்வில பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து T-56 ரக இரண்டு துப்பாக்கிகள், இரண்டு மெகசீன்கள், 60 தோட்டாக்கள், தொலைநோக்கி மற்றும் வாள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

 

To Top