Top News

ரணிலை ரிஷாட் சந்தித்தாரா? நடந்தது என்ன?




(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

அகில இலங்கை  மக்கள் காங்கிரஸ் தலைவரான நாடாளுமன்ற  உறுப்பினர்  ரிஷாத்  பதியுதீன்  இன்று (31) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்ததாகவும்  ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் பரவியுள்ள செய்தி தொடர்பில் ரிஷாத் பதியுதீனை தொடர்பு கொண்டு கேட்டபோது  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“அவ்வாறு நான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவில்லை. இது ஒரு சிலரால் இட்டுக் கட்டப்பட்டு பரப்பப்படும்  பொய்யான செய்தியாகும்.

யுஎஸ்எட் நிறுவனம்  கலந்துரையாடல் ஒன்றை பத்தரமுல்லையில்  உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த மூன்று தினங்களாக நடத்தியது.  அதன் இறுதிநாள் நிகழ்வு இன்றாகும்  (31)

வர்த்தகம் மற்றும் நிவாரணங்கள், நிதிநிலைமைகளைக் கையாளுதல்  தொடர்பிலான இந்த மகாநாட்டில் கலந்து கொள்ள முன்னாள்  கைத்தொழில் வர்த்தக அமைச்சர் என்ற வகையில் நானும் அழைக்கப்பட்டிருந்தேன். என்னுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தலதா அத்துக்கோரள, மதுர விதாரண மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். 

எமது இந்தக் கலந்துரையாடல் குறித்த ஹோட்டலின் 2 ஆவது தளத்தில் இடம்பெற்றது.

இந்நிலையில், அதே  ஹோட்டலின் மூன்றாவது தளத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நான் சந்திக்கவில்லை.

என்மீதும் எமது கட்சி மீதும் காழ்ப்புணர்வு கொண்டவர்களே  இவ்வாறு  வதந்தியைப் பரப்பியுள்ளனர்.“ என்றார்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹகீமின் சகோதரர் ரவூப் ஹஸீரே இவ்வாறு பரப்பியிருந்தார். 

harsha De silva Tweets...


 https://x.com/harshadesilvamp/status/1818592153628758183?s=46&t=DjfbGavAwepBK3ID2X5WMA

Post a Comment

Previous Post Next Post