Headlines
Loading...
முஸ்லிம் காங்கிரஸுக்குள் குழப்பம்: உயர்பீடக் கூட்டம் ஒத்திவைப்பு

முஸ்லிம் காங்கிரஸுக்குள் குழப்பம்: உயர்பீடக் கூட்டம் ஒத்திவைப்பு


(.எச்.சித்தீக் காரியப்பர்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சில நாட்களாக நாட்டில் நிலவும் அரசியல் மாற்றங்களைக் கட்சி அவதாளித்து வருவதாகவும் இதன் காரணமாக தமது கட்சி யாரை ஆதரிப்பது என்பது குறித்து உத்தியோகபூர்வ முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தமிழ் லீடருக்கு தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் சில நாட்களாக அரசியல் கட்சிகளிடையே பல்வேறு நிலைப்பாடுகள் முன்னெடுக்கப்படுவதனை அவதானிக்க முடிகிறது.

இவ்வாறான நிலைமையை எமது கட்சி நிதானமாக அவதானித்து வருகிறது. பொதுஜன பெரமுனவின் அதிக எண்ணிக்கையான எம்பிக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கிழக்கிலங்கையைச் சேர்ந்த எமது கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்களில் பெரும்பான்மையானோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையே ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர் .

இவ்வாறானதொரு நிலைமையில் எமது கட்சி தமது நிலைப்பாட்டை அறிவிப்பதில் தாதமடைகிறது.

எமது அரசியல் பீடக் கூட்டத்தை இரண்டொரு தினங்களில் நடத்தி யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தீர்மானிக்கவிருந்தோம்.

இருப்பினும், தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் எமது கட்சியினர் முன்வைத்துள்ள ரணிலை ஆதரிக்க வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பில் அதிக கரிசனை கொண்டுள்ளதால் எமது கட்சியின் அரசியல் உயர்பீடக் கூட்டத்தை ஓரிரு தினங்களுக்கு ஒத்திவைக்க வேண்டியுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கன் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாகவுள்ள தேர்தல் கூட்டணி தொடர்பிலும் கவனம் செலுத்துகிறோம்.  எமது கட்சியினால் முன்வைக்கப்படவுள்ள பல கோரிக்கைகளுக்கு சஜித் பிரேமதாச இணக்கம் தெரிவித்து கைச்சாத்திட வேண்டும். அதன் பின்னரே இது தொடர்பில் ஆராய்வோம்.


ரணில் - சஜித் என்பது எமக்கு பிரச்சினை இல்லை ஆனால் எமது முஸ்லிம் சமூகம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளுக்கு அவர்கள் இணக்கம் தெரிவிக்க வேண்டும். அதன்பின்னரே ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற எமது நிலைப்பாட்டை அறிவிப்போம்.

இது இதுதவிர, எவரையும் எந்த நிபந்தனையும் இன்றி ஆதரிக்க நாம் தயாரில்லை. ஆனால் இரு தரப்பினரும் எம்முடன் பேசுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

0 Comments: