Top News

சுங்கத் திணைக்களத்தில் தேங்கிக் கிடந்த 25 ஆயிரம் குர்ஆன் பிரதிகளை விடுவிப்பு - நேரடி கலத்தில் ஆசாத் சாலி

மேல்மாகாணம் முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் இடைவிடாத முயற்சியினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி  தலையீட்டின் மூலம்முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பைசல் ஆப்தின் பெயருக்கு மக்காவில் வசிக்கின்ற இலங்கையினைச் சேர்ந்த சாதீக் ஹாஜியாரினால் அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் மற்றும் அதன் சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்பு, இஸ்லாமிய நூல்கள் விடுவிக்கப்படமால் சுங்கத் திணைக்களத்தில் கடந்த சில மாதங்களாக தேங்கிக் கிடந்த நிலையில் நேற்றைய தினம் முதல் கட்டமாக 25 ஆயிரம் குர்ஆன் பிரதிகளை நேற்று இரவு களத்திற்கு நேரடியாக சென்ற அஸாத் சாலி அவற்றை விடுவித்துக் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து அனுப்பப்பட்ட புனித குர்ஆன் பிரதிகளில் மேலும் 10 ஆயிரம் சிங்கள பிரதிகள் சுங்கத் திணைக்களத்தில் இருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

Post a Comment

Previous Post Next Post