Top News

28 தோட்டாக்களுடன் முன்னாள் மாகாண அமைச்சரின் மகள் கைது - நீதிமன்றம் அளித்த உத்தரவு என்ன?

 

காலம் சென்ற முன்னாள்  மாகாண அமைச்சர் பி.பி.திஸாநாயக்கவின்  மகளான 44 வயதுடைய பெண் , அக்குரஸ்ஸ, கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் 28 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அதாவது அண்மையில், பி.பி.திஸாநாயக்கவின்  11 வயது பேரன் உயிருள்ள வெடிமருந்துகளுடன் பாடசாலையில் விளையாடியபோது ஆசிரியரிடம் சிக்கிக் கொண்டார். இந்த சம்பவம் குறித்து அதிபரிடம் ஆசிரியை தெரிவிக்க, அவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

மாணவனின் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, காவல்துறையினர் கலென்பிந்துனுவெவவில் உள்ள வீட்டை சோதனையிட்டதில், 17 T-56 ரவைகள், 9mm 10 ரவைகள் மற்றும் ஏனைய துப்பாக்கிகளுக்கான பல்வேறு தோட்டாக்கள் உள்ளிட்ட தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

எனினும் கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பெண் செப்டம்பர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

28 தோட்டாக்களுடன் முன்னாள்  மாகாண அமைச்சரின் மகள் கைது - நீதிமன்றம் அளித்த உத்தரவு என்ன?

Post a Comment

Previous Post Next Post