வேட்பாளர்களுக்கு ஆதரவாக விளம்பரப்படுத்தும் ஸ்டிக்கர்களை வாகனங்களில் காட்சிப்படுத்தக் கூடாது - எச்சரிக்கை

Ceylon Muslim
0

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக விளம்பரப்படுத்தும் ஸ்டிக்கர்களை வாகனங்களில் காட்சிப்படுத்தக் கூடாது என வாகன சாரதிகளுக்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் ஜனாதிபதி வேட்பாளர்களின் படங்கள் மற்றும் சின்னங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களைக் காட்சிப்படுத்துவது குறித்து ஆணைக்குழுவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தகைய செயற்பாடுகள் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை மீறும் செயலாகும் என்று குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணைக்குழு, மோட்டார் வாகனங்களில் உள்ள அனைத்து அடையாளங்கள் மற்றும் ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

ஸ்டிக்கர்களை அகற்றுவதற்கு நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top