Top News

ரணில் விக்கிரமசிங்கவின் தோ்தல் இயக்கத்தில் அரச ஊழியர்களை ஈடுபடுத்துதல் முனைப்பாக தெரிகிறது - பிரதிப் பொலிஸ் மா அதிபர். டீ. கஜசிங்க

 

ரணில் விக்கிரமசிங்கவின் தோ்தல் இயக்கத்தில் அரச ஊழியர்களை ஈடுபடுத்துதல் முனைப்பாக தெரிகிறது.

தேசிய மக்கள் சக்தியின் தோ்தல் கண்காணிப்பு நிலையத்தின் பிரதானி இளைப்பாறிய பிரதிப் பொலிஸ் மா அதிபர். டீ. கஜசிங்க

(தேசிய மக்கள் சக்தியின் தோ்தல் கண்காணிப்பு நிலையத்தின் ஊடக சந்திப்பு - 2024-09-11)

ஜனாதிபதி தோ்தல் பிரகடனம் செய்யப்பட்டுள்ள தருணத்தில் செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள் 1981 இல் 15 ஆம் இலக்கமுடைய ஜனாதிபதியொருவரை தெரிவு செய்வதற்கான சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற வேட்பாளரும் மேலும் பலரும் இந்த சட்டத்தை தொடர்ச்சியாக மீறுதல் பற்றி மொத்தமாக 358 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பான 178 முறைப்பாடுகளும், சட்டமுறையான தோ்தல் இயக்கங்களுக்கு தடை ஏற்படுத்துதல் தொடர்பான 06 முறைப்பாடுகளும், வன்முறை செயல்கள் சம்பந்தமாக 26 முறைப்பாடுகளும், மக்கள் அபிப்பிராயம் மீது முறைதகாதவகையில் அழுத்தம் கொடுத்தல் பற்றிய 104 முறைப்பாடுகளும், அரச வளங்களின் துஷ்பிரயோகம் சம்பந்தமாக 62 முறைப்பாடுகளும், அரச உத்தியோகத்தர்களை தோ்தல் நடவடிக்கைகளில் முறை தகாதவகையில் ஈடுபடுத்துதல் சம்பந்தமாக 33 முறைப்பாடுகளும்  என்ற வகையில் இவை கிடைத்துள்ளன.


இந்த அனைத்து முறைப்பாடுகள் சம்பந்தமாகவும் தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கும் பொலிசுக்கும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பில் சாதகமான பிரதிபலிப்புக்கள் கிடைத்து சட்டவிரோத செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தோ்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது. அரச ஆதனங்கள் எனும் பதத்தில் தோ்தல்கள் சட்டத்திற்கிணங்க உத்தியோகத்தர்களும் உள்ளடங்குவர். ரணில் விக்கிரமசிங்கவின் தோ்தல் இயக்கத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்காக அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவது முனைப்பான ஒரு விடயமாக அமைந்துள்ளது. ரணவிரு சேவா அதிகார சபை மூலமாக இராணுவ வீரர்களை அழைப்பித்து அவர்கள் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்த தயாராகி வருவது உறுதியாகி இருக்கிறது. நாளை (12 ஆம் திகதி) ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சார அலுவல்களை மேம்படுத்துவதற்கான மாநாடொன்றினை நடாத்த ஏற்பாடு செய்துள்ளார். அரசாங்க வாகனங்களும் உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இதனை ஏற்பாடு செய்தவர் ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவராவார். அதைப்போலவே அரசாங்கத்திற்கு சொந்தமான வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் எல்.ஆர்.டி.சி. பாதுகாப்பு கம்பெனியின் ஊழியர்களையும் கடமைக்கு சமூகமளித்த பின்னர் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறும் போக்குவரத்து வசதிகளை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post