சஜித்துக்கு ஆதரவு வழங்கும் முன்னாள் எம்.பி முருகேசு சந்திரகுமார

Roshan Akther
0


 முன்னாள் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துக் கட்சியின் பொதுச் செயலாளருமான திரு.முருகேசு சந்திரகுமார அவர்கள் 2024 ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின்
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் சமத்துவக் கட்சியின் பொதுச்
செயலாளர் மு.சந்திரகுமார் ஆகியோர் இடையே இன்று(02) சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பையடுத்து இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ முருகேசு சந்திரகுமார் இந்த அறிவிப்பை விடுத்தார்.

1994-2000 மற்றும் 2010-2015 காலகட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ள இவர், தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து, பாராளுமன்ற தெரிவுக் குழுக்களில் பிரதித் தலைவராகவும் பணியாற்றி அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியுமாவார்.

2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிட்டார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top