Headlines
Loading...
 ஜனாதிபதிக்கு ஆதரவாக கலைஞர்கள் ஒன்றிணைவு

ஜனாதிபதிக்கு ஆதரவாக கலைஞர்கள் ஒன்றிணைவு







வரலாற்றில் தொலைந்து போக இருந்த தலைவரை, நெருக்கடி மற்றும் போராட்டத்தால் மீண்டும் சந்தித்தோம் - பிரபல நடிகர் ரொஜர் செனவிரத்ன


ரணிலுக்கு நாடு தேவையில்லை என்றாலும், நாட்டுக்கு ரணில் தேவை- பிரபல பாடகர் ரஜீவ் செபஸ்டியன்


ஜே.வி.பி.யின் முழுநேர உறுப்பினராக இருப்பதால், எனக்கு அதன் உள்ளக நிலைமை நன்றாகத் தெரியும்; நீங்கள் நினைக்கும் கனவுஉலகத்தின் மக்கள் ஜே.வி.பி.யில் இல்லை- பிரபல நடிகர் சேனக விஜேசிங்க


மக்கள் மீண்டும் வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்கியது மாத்திரமே; இந்த நிலைமை தலைகீழாக மாறக் கூடாது 

-  திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடக இயக்குனர் ரங்க விஜேவிக்ரம 


ஒரு சிறந்த நாட்டிற்கு வரலாற்றில் வலுவாக முன்னோக்கி எடுத்து வைக்கும் ஒரு படியாக ஜனாதிபதி ரணிலை ஆதரிப்போம்

- திரைப்படத் தயாரிப்பாளர் மொஹான் ஹெட்டியாரச்சி


வரலாற்றில் காணாமல் போயிருந்த ஒரு தலைவர் நெருக்கடி மற்றும் போராட்டத்தினால் இலங்கைக்கு மீட்டெடுக்கப்பட்டதாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பாரிய அழிவில் இருந்து காப்பாற்றி முறையான ஆட்சியை ஏற்படுத்தியதாகவும் பிரபல நடிகர் ரொஜர் செனவிரத்ன தெரிவித்தார்.


பொருளாதார நெருக்கடி இன்னும் முடிவடையவில்லை, எனவே இலங்கை மக்கள் மீண்டும் வீழ்ச்சியடைவதா அல்லது காப்பாற்றப்படுவதா என்பதை செப்டம்பர் 21 ஆம் திகதி தீர்மானிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


கொழும்பிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரபல நடிகர் ரொஜர் செனவிரத்ன இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கையின் பிரபல கலைஞர்கள் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.


நாட்டில் பல சமயங்களில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளால் கலைத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்திட்டங்களினால் நாட்டின் கலைத்துறை நல்ல நிலைக்குத் திரும்பியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.  


எனவே, கலைத்துறைக்கும் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்ல எதிர்காலத்தைப் பெற்றுத் தரும் வகையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த ரொஜர் செனவிரத்ன;


"நெருக்கடி மற்றும் போராட்டத்தின் காரணமாக, வரலாற்றில் தவறவிட்ட ஒரு தலைவரை மீண்டும் சந்தித்துள்ளோம். மக்கள் வரிசையில் நின்றனர், மக்கள் வரிசையில்  சண்டையிட்டுக் கொண்டனர்; எரிபொருள், எரிவாயு, பால் மா, உணவு போன்றவை நாட்டில் கிடைக்கவில்லை, மின்சாரம் இல்லை.


இருபத்தைந்து மாதங்களுக்கு முன்னர் எவ்வாறானதொரு நாடு எமக்கு இருந்தது? ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த நிலையை மாற்றினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரே ஒரு ஆசனத்தைக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினராக பிரதமர் பதவியை ஏற்க முன்வந்தார். அன்றிலிருந்து அவர் வரிசைகளை அகற்றினார். பாரிய அழிவில் முடிவடையவிருந்த நாடு அந்த நிலையில் இருந்து மீட்கப்பட்டு ஸ்திர நிலைக்குக்  கொண்டுவரப்பட்டது.


வரலாற்றில் நாம் பல ஜனாதிபதித் தேர்தல்களை எதிர்கொண்டுள்ளோம். தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அரசியல் பிரச்சினைகளின் அடிப்படையில் ஜனாதிபதிகளை நியமித்தோம். பொருளாதார விடயங்களுக்கு அதன்போது அதிகளவு  இடமிருக்கவில்லை.


ஆனால் இம்முறை பொருளாதாரத்தின் அடிப்படையில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பொருளாதார ரீதியில் வங்குரோத்தாகி இருந்த நாடு அந்த நிலையில் இருந்து மீண்டு வந்தாலும், மீண்டும் வீழ்வோமா அல்லது அதிலிருந்து மீள்வோமா என்ற கேள்வி நம் அனைவருக்கும் உள்ளது. இது குறித்து செப்டம்பர் 21 ஆம் திகதி முடிவெடுக்க வேண்டும்’’ என்றார்.


பிரபல  நடிகர் சேனக விஜேசிங்க;

“76 வருட சாபத்திற்கு முடிவு கட்டுவதாகக் கூறும் ஜே.வி.பி 1994 முதல் 2015 வரை பல்வேறு கட்சிகளை ஆதரித்ததை மறந்துவிடக் கூடாது. அதன்படி அந்த 76 வருடங்களில் 30 வருடங்கள் நாட்டை வங்குரோத்து செய்வதில் ஜே.வி.பியும் பங்களித்தது என்பது தெளிவாகிறது.


மேலும், 1988 ஆம் ஆண்டு ஹாரிஸ்பத்துவ தெற்கு பிரதேசத்தில் ஜே.வி.பியின் முழுநேர உறுப்பினராக இருந்த நான் அவர்களின் உள்ளகத்தை நன்கு அறிவேன். ஜே.வி.பி.யின் எந்தத் தலைவருடனும் ஒரே மேடையில் விவாதம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். ஜே.வி.பி.யின் உள்ளுணர்வையும் அவர்கள் என்ன செய்தார்கள், என்ன சொன்னார்கள் என்பதையும் நான் அறிவேன். எப்படிக் கொன்றார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும்” என்றார்.


திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடக இயக்குனர் ரங்க விஜேவிக்ரம;

"பல சந்தர்ப்பங்களில், இந்த நாட்டில் ஏற்பட்ட பல்வேறு சூழ்நிலைகளால் கலைத்துறையும் கலைஞர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆனால் 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியின் பின்னர், இரண்டு வருடங்களில் நாட்டைக் மீட்டெடுப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய பணியின்  காரணமாக கலைத்துறைக்கும் கலைஞர்களுக்கும் மீண்டும் நல்ல காலம் உருவானது.


இன்று, மக்கள் இசைக் கச்சேரிகளையும் பல்வேறு கலாசார நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்கிறார்கள், கடந்த கால அழுத்தங்களைத் தவிர்த்து, வாழ்க்கையைப் பற்றி புதிதாக சிந்திக்கத் தொடங்குகிறார்கள். இவ்வாறான தருணத்தில் எமது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதிக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.


திரைப்படத் தயாரிப்பாளர் மொஹான் ஹெட்டியாரச்சி;

“எமது நாடு பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும். எனவே எமது நாட்டின் அடுத்த சந்ததியினருக்கு சிறந்த பொருளாதாரம் கொண்ட நாட்டைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் கலைஞர்கள் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தோம்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்நாட்டின் கலைத்துறைக்கு பெரும் சேவையாற்றியுள்ளார். அவரது எண்ணக்கருவின்படி ஆரம்பிக்கப்பட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக இன்றும் பல பிரபல கலைஞர்கள் களத்தில் உருவாகியுள்ளனர். ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வையால் நாட்டின் கலைஞர்களுக்கு எதிர்காலம் கிடைத்தது. மேலும் இந்த நேரத்தில் ரணிலுக்கு நாடு வேண்டாம் என்றாலும், நாட்டுக்கு  ரணிலே வேண்டும் என்பதைக் குறிப்பிட வேண்டும்” என்றார்.


ஊடகப் பிரிவு

Ranil24 - இயலும் ஸ்ரீலங்கா

11-09-2024


0 Comments: