Top News

கடும் போட்டியில் ரணில்,அனுர..!

 அண்மையில் ஜனாதிபதியின் பிரசார குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ,தேர்தலில் வெற்றியின் பின்னர் தான் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள நல்ல நேரம் கணிக்கப்பட்டுள்ளதாக, சமகால ஜனாதிபதியும் வேட்பாளருமான ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் வெற்றியின் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்தவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என, ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.


தேர்தல் வெற்றி குறித்து பதற்றமடைய வேண்டாம் என அனுரவுக்கு தகவல் அனுப்புமாறும், அந்த வெற்றி தனக்கானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தனது வெற்றி குறித்து ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ளதாகவும், பதவிப்பிரமாணம் செய்யும் நேரமாக எதிர்வரும் 22ஆம் திகதி மதியம் 2 மணி முதல் 4 மணி வரை, ஜோதிடர்களால் நேரம் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


தனது பதவிப்பிரமாணத்திற்கு அனுரவும் வருகை தர முடியும். அத்துடன் அனுர தனது பணியை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post