Headlines
Loading...
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்;  விஷேட ஆணைக் குழு, சிறப்பு விசாரணை பிரிவு, விஷேட வழக்குத் தொடுநர் அலுவலகம் கோரி பிரேரணை

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்; விஷேட ஆணைக் குழு, சிறப்பு விசாரணை பிரிவு, விஷேட வழக்குத் தொடுநர் அலுவலகம் கோரி பிரேரணை

( அம்னா இர்ஷாத்)

உயிர்த்த ஞாயிறு தினம் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்காக விஷேட ஆணைக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.   உள்நாட்டு வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் நிபுணர்களுடன் கூடிய குறித்த‌ ஆணைக் குழுவூடாக மேற்பார்வை செய்யப்ப‌டும்  விஷேட விசாரணை அலுவலகம்  ஒன்றும்  ஸ்தாபிக்கப்படல் வேண்டும் எனவும்  குறிப்பிட்டு சமூக மற்றும் சமாதானத்துக்கான மையம் ( சி.எஸ். ஆர்.) அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும்  பரிந்துரைகள் அடங்கிய கோவை ஒன்றினை முன்வைத்துள்ளது.
 அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால்,  அந்த பரிந்துரைகளை நடைமுறைப்ப‌டுத்துவதாக  தமது அபிப்ராயத்தை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அறிவிக்குமாறு சமூக மற்றும் சமாதானத்துக்கான மையம் அனைத்து ஜனாதிபதி வேட்பாள‌ர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய சட்ட மா அதிபர் திணைக்களத்தில் உள்ள முரண்பாட்டு நிலைமையை தடுப்பதற்காக வழக்குத் தொடுத்தல் மற்றும் விசாரணைகளை நெறிப்படுத்தல் ஆகிய பணிகளுக்காக  விஷேட வழக்குத் தொடுநர் அலுவலகம் ஒன்றினை நிறுவவும் பரிந்துரை முன் வைக்கப்பட்டுள்ளது.

சமூக மற்றும் சமாதானத்துக்கான மையம் சார்பாக அதன் பணிப்பாளர் அருட் தந்தை ரொஹான் சில்வா ஊடாக குறித்த பரிந்துரைகள் அனுப்பட்டுள்ளன.
'ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், 2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, சமூகம் மற்றும் சமாதானத்துக்கான மையம் ( CSR), ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன் வைக்கும் பரிந்துரைகள்' எனும் தலைப்பில் இந்த பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. 

உண்மையை கண்டறிதல், ஏற்றுக்கொள்ளல் மற்றும் வெளிப்படைத் தன்மை,  நட்ட ஈடு மற்றும் குற்றவியல் நீதி ஆகிய பிரிவுகளின் கீழ் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இந்த பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் உண்மையை கண்டறிதல் பிரிவின் கீழ்,  விசாரணை ஆணைக் குழு சட்டத்தை திருத்தி பரந்த அதிகாரமுடைய ஆணைக் குழுவொன்றினை நிறுவ தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி பூரண அதிகாரமுடைய ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவை நியமிக்கவும், அவர்களது முதற் கடமையாக தற்போதும் ஆணைக் குழுக்களுக்கும், பொலிஸாருக்கும் பல்வேறு தரப்பினருக்கும் வழங்கப்பட்டுள்ள வாக்கு மூலங்கள்,சாட்சிகள அனைத்தையும் பரிசீலித்து  பகுப்பாய்வு செய்ய வேண்டும் என  ஆணைக் குழு அதிகார பத்திரத்தில் குறிப்பிடப்படல் வேண்டும் எனவும் குறித்த பரிந்துரைகளில் கோரப்பட்டுள்ளது.
உள்நாட்டு வெளிநாட்டு பக்கச்சார்ப்பற்ற நீதிபதிகள், உள்நாட்டு வெளிநாட்டு விசாரணையாளர்கள் மற்றும்  சட்ட வல்லுநர்கள் ஊடாக இந்த ஆணைக் குழுவும் அதன் விசாரணைப் பிரிவும் அமையப் பெறல் வேண்டும் என பிரேரிக்கப்பட்டுள்ளதுடன் ஆணைக் குழு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய மேற்பார்வையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் அனுமதி அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  நட்ட ஈடு பிரிவின் கீழ் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், அதன் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவான கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள், அரசியல் கைதுகள், அரசியல் காரணமாக பழிவாங்கப்பட்ட விசாரணையாளர்களுக்கும் நீதி நிலைநாட்டப்பட்டு நட்ட ஈடு வழங்கப்படல் வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
 குறித்த முழுமையான அறிக்கை வருமாறு :

0 Comments: