இம்முறை ஜனாதிபதி தேர்தலில்போட்டியிடும் பிரதான வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துமாறு உத்தரவு என்ற தகவல் வெளியான நிலையில் , கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த தகவல்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு குற்ற புலனாய்வு பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்ப்பில் இரகசியமான அறிக்கையொன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதவானிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை இரகசியமாக பேணுமாறு நீதிமன்றம் மேலும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
மற்றும் இந்த தாக்குதல் தொடர்பிலான தகவல்களை குற்ற புலனாய்வுப் பிரிவிற்கு வழங்கிய நபரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment