தேசிய மக்கள் சக்தி தோ்தல் கண்காணிப்பு அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி அகலங்க உக்வத்த
(தேசிய மக்கள் சக்தியின் தோ்தல் கண்காணிப்பு நிலையத்தின் ஊடக சந்திப்பு - 2024-09-11)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு சுயேட்சை வேட்பாளராக தோ்தலில் போட்டியிட முன்வந்துள்ளபோதிலும் சுயாதீனத்தன்மையை வெளிப்படுத்தாமல் அரச வளங்கள், ஆதனங்கள், அரச உத்தியோகத்தர்கள், இராணுவ உத்தியோகத்தர்கள், விமான நிலைய உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். எனினும் அந்த செயல்களை நிறுத்துவதற்கான ஆக்கமுறையான பிரதிபலிப்பு தென்படவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியை போன்றே சுயேட்சை வேட்பாளர் ஆகிய இருவரும் ஊடகங்களை பாவித்து தொடர்ச்சியாக பொய்யான விடயங்களையும் சேறு பூசல்களையும் மேற்கொண்டு வருகிறார்கள். அவ்வாறான செயல்கள் தோ்தல் தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ஆங்காங்கே பதிவாகியபோதிலும் இன்றளவில் அன்றாடம் பல சம்பவங்கள் பற்றி பதிவாகி வருகின்றது. பிரச்சார நடவடிக்கைகளுக்காக எஞ்சியுள்ள ஒரு வாரகாலத்திற்குள் இந்த நிலைமை தொடர்ந்தும் வளர்ச்சியடைவதற்காக செயலாற்றிக் கொண்டிருப்பதும் எமக்கு அறியக்கூடியதாக உள்ளது.
அந்த விடயங்கள் சம்பந்தமாக முறைப்பாடு செய்வதே எங்களுடைய பொறுப்பாகும். புலனாய்வு செய்வது தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கும் பொலிசுக்கும் பொறுப்பான விடயமாகும். இது சம்பந்தமாக துரிதமாக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் 22 ஆம் திகதிக்கு பின்னரேனும் பெற்றுக்கொள்ள வேண்டிவரும். போலியாவணம் பிரச்சாரம் செய்தல் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. இவை தண்டனைச் சட்டகோவையின் 154 தொடக்கம் 159 வரையான பிரிவுகளில் உள்ளடக்கப்பட்ட கடுமையான விடயங்களாகும். தோ்தல் காலத்தின் பின்னர் இது சம்பந்தமாக சிக்கலொன்று ஏற்படமாட்டாதென சமூக ஊடகங்களை பாவித்து இந்த சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் நினைத்துக்கொண்டிருப்பார்களாயின் அது அப்படியல்ல. போலியாவணம் புனைந்தவர்கள் மாத்திரமல்ல அவற்றை பிரச்சாரம் செய்த சமூக ஊடகங்களும் பொறுப்புக்கூற வேண்டும். தண்டனைச் சட்டக்கோவை அமுலில் இருக்கிறது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் காலை நேர நிகழ்ச்சிகள் பற்றியும் விசேட கவனம் செலுத்தினால் நீண்டகாலமாக சமூகத்தில் துர்நாற்றம் வீசுகின்ற ஒரு நிகழ்ச்சியாக இனம்காணப்பட்டிருந்தது. இப்பொழுது அது மிகவும் அருவருக்கத்தக்க வித்தத்தில் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவரால் தேசிய மக்கள் சக்தியின் தலைவரையும் அரசியல் இயக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு பொய்யான விடயங்களையும் தோ்தலை அடிப்படையாகக் கொண்டு மக்களின் மனங்களை திரிபுபடுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக தனித்துவமான முறைப்பாடொன்று நாளையதினம் மேற்கொள்ளப்படும். அவரால் தலைவர் வகிபாகத்தை தோ்தல் காலத்தில் முறைப்படி ஈடேற்ற முடியாவிட்டால் தகுதிவாய்ந்த அதிகாரியின் கீழ் கொண்டுவருமாறு கோரிக்கை விடுக்க நேரிடும். இந்த துர்நாற்றத்தை தாங்கிக் கொள்வது சமூகத்திற்கு மிகவும் சிரமமானதாகும். அதனை நீக்கவேண்டும். அரச நிறுவனமொன்றான ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இந்த செயற்பாடு சம்பந்தமாக ஏற்கெனவே எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதென்பதை அறியக்கூடியதாக இருக்கிறது. தோ்தல் சட்டம் மாத்திரமன்றி குற்றவியல் சட்டத்தையும் மீறி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் புரிகின்ற இந்த செயல்கள் சுதந்திரமானதும் நியாயமானதுமான தோ்தல் நடைமுறைக்கு தடையாக அமைந்துள்ளது.
Post a Comment