Top News

ஹிஸ்புல்லாஹ் பயன்படுத்தும் ‘பேஜர்’கள் வெடித்துச் சிதறியது

 லெபனான் நாட்டில் திடீரென பாதுகாப்பான தகவல் பறிமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும் வோக்கி பேஜர்கள் வெடித்த சம்பவம் பற்றி பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

லெபனான் நாட்டின் பிரதான அரசியல் கட்சியாகவும் துணைராணுவப் படையாகவும் ஹிஸ்புல்லா செயல்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஹிஸ்புல்லாவை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. இந்த அமைப்பானது தங்கள் தகவல் தொடர்புக்காக கையடக்க கருவியாக பேஜர்களை பயன்படுத்தி வருகின்றனர்.இந்தக் கருவிகள் அனைத்தும் நேற்று இரவு ஒரே நேரத்தில் திடீரென வெடித்துச் சிதறின. இதில் 9 பேர் பலியாயினர். 2,700க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர்.

ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு வந்த பேஜர்களை முன்கூட்டியே வழிமறித்து, பொதிகளை இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் கைப்பற்றி விட்டது. பேஜர்களின் உள்ளே வெடிபொருளை வைத்து, மெசேஜ் வந்தால் வெடிக்கும் வகையில் செய்திருக்கிறது. இது எல்லாம் ஐந்து மாதங்களுக்கு முன் நடந்துள்ளது.அந்த பேஜர் பொதிகள், ஹிஸ்புல்லாவுக்கு கிடைத்து, அவர்களும் வெடிபொருள் இருப்பது தெரியாமலேயே பயன்படுத்தி வந்துள்ளனர். இஸ்ரேலிய உளவு அமைப்பினர் குறித்த நேரத்தில் மெசேஜ் அனுப்பி அவற்றை நேற்று வெடிக்க வைத்து விட்டனர்.இப்படி பேஜர்கள் மூலம் தாக்குதல் நடத்துவது உலகில் இதுவே முதல் முறை என்பதால், ஒட்டு மொத்த உலக நாடுகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன. என கூறப்படுகின்றது.

பேஜர்கள் என்றால் என்ன?
20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்ட தகவல்தொடர்பு சாதனங்களில் பிரபலமானது பேஜர்கள். இது கம்பியில்லா தொலைத்தொடர்பு சாதனங்களாகும். ஒரு வழிப்பாதை தகவல் தொடர்புக்கு வசதியானவை. தகவல் பெறுபவர் பதில் அனுப்ப முடியாது.

Post a Comment

Previous Post Next Post