Top News

ஈமானிய தேடல்

தேனாக பிறந்த 

காலம் போய்...

தீனையே மறந்த 

காலம் இன்று..! 


அனாச்சாரங்களும்,

அழிவுகளுகம் 

அன்னியோன்யமாய் 

அசைப்போட்டு

கொண்டிருக்கிறதே, 

ஈமானை இழந்த 

உள்ளங்களில்..!


அன்றோ கலிமாவை 

மனனம் செய்த 

நெஞ்சங்கள்,

இன்றோ சங்கீதங்களால் 

தஞ்சமாகி விட்டதே..!

 

மறவாதே இசைவனம் 

என்றும்! 

மன்றாடு இறைவனுடனே

நின்று..! 


நெடுந்தூர பயணத்தில் 

கானல் நீராய் இவ்வுலகம் 

இருக்க,

ஈமானை மறந்த 

குறுகிய ஆசைகளால் 

இவ்வுலக வாழ்க்கையை 

தொலைத்து விடாதே...!


நிலையற்ற இவ்வுலகில் 

எதுவும் நிரந்தரமில்லை 

நீ செய்த நன்மைகளை தவிர...


மழைகள் பொழிந்தாலும் 

அலைகள் அடித்தாலும் 

ஒரு பொழுதும் பாறைகள் 

கரைவதில்லை...

ஏனோ தெரியவில்லை 

ஈமானோ எம் உள்ளத்தை 

விட்டு கரைத்து 

செல்கின்றது..!


ஒவ்வொரு சோதனைக்குப் 

பின்னும் 

சந்தோஷங்கள் நமக்காகவே 

காத்திருக்கின்றன..!

வெவ்வேறு வழிகளில்

நாம் வாழும் வாழ்க்கை

கூட நமக்கு சோதனையே..

எம்மை மீட்டெடுக்க

இலாஹ் அவனே 

போதுமானவன்...


ஈமான் கொள்ளுங்கள் 

அந்த கோமான் மீது 

மட்டும்...


அன்றோ....


 "குர்ஆனை" 

மிதிக்க பொங்கி

எழும்பியது 

பல குரல்கள்...


"தூதரை"

அவமதிக்க 

வீறு கொண்டு 

நின்றார்கள் 

நபி வழியில்...


"ஷரீஅத்தை"

சாட, கிலாபத்தே 

இலக்கென 

துணிந்தார்கள் ...


முஸ்லீம்களை வெறுத்தும்

இஸ்லாத்தை மறுத்தும்

கருத்துக்கள் கிளம்ப

பல போர்களும் தொடுக்க 

இறுதி மூச்சுவரை 

இஸ்லாமே என்று 

ஈமான் கொண்டு

ஒன்றுப்பட்டார்கள் அன்று...


இன்றோ...


மீடியாவின் அபாண்டமும், 

முகவர் ஆட்சியில் அட்டூழியமும்,

வாய்மை வெல்ல வேண்டிய இடத்தில் அநீதியும்,

சாதி,மதத்திற்காக 

வெறிப்பிடித்தவனாய் 

அழைவதும்,

உதவி என்ற பெயரில் 

ஏழை மானத்தை 

விளம்பரம் செய்தும், 

எம்மை அறியாமலே 

ஈமானிற்றி 

புதைந்துவிட்டோம்

இவ்வுலகில்...


குர்ஆனாய் நடமாடி..

நபி வழியிலே நாளும் 

நாம் ஆள...

புனித பூமியில் 

இனிதாய் நிலைத்திட ....

ஈரக்கனவுகளை

நனவாக்கி விடுவோம் 

ஈமான் கொண்ட 

உள்ளதோடு

இன்றே உழைப்போம் 

வாருங்கள்...!

Post a Comment

Previous Post Next Post